பும்ராவை சமாளிப்பாரா வைபவ்

கவுகாத்தி: இந்திய கிரிக்கெட்டின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 15. கிரிக்கெட் லீக் அரங்கில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடுகிறார். கடந்த 2025 சீசனில் அறிமுகம் ஆன இவர், குஜராத் அணிக்கு எதிராக 38 பந்தில் 101 ரன் விளாசி மிரட்டினார். அடுத்து மும்பைக்கு எதிரான போட்டியில் தீபக் சகார் பந்தில் ‘டக்’ அவுட்டானார்.

தற்போது ஒரு ஆண்டு ஆன நிலையில் வைபவ், நன்றாக தேறியுள்ளார். 19 வயதுக்குட்பட்ட உலக கோப்பை தொடரில் இந்தியா கோப்பை வெல்ல கைகொடுத்தார்.

நடப்பு சீசனில் முதல் இரு போட்டியில் 17 பந்தில் 52, 18 பந்தில் 31 என ரன் எடுத்துள்ளார். இன்று கவுகாத்தியில் நடக்கும் போட்டியில் ராஜஸ்தான் அணி, மும்பையை சந்திக்க உள்ளது. இதில், இந்திய அணியின் எதிர்கால நட்சத்திரம் என வர்ணிக்கப்படும் வைபவ், வேகப்பந்து வீச்சாளர் பும்ராவை முதன் முறையாக சந்திக்க உள்ளார். இதில் ஆதிக்கம் செலுத்துவர் யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Source link