புவனேஸ்வர்: ஒடிசாவில் கார் – லாரி நேருக்கு மோதியதில் போலீசார் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஒடிசாவின் ஜார்சுகுடா மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இன்று (பிப்ரவரி 22) அதிகாலையில் கார் – லாரி நேருக்கு மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் போலீசார் 5 பேர் கொல்லப்பட்டனர். மேலும் நான்கு பேர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
ஜார்சுகுடாவில் ஒரு திருமணத்திற்குச் சென்று எட்டு பேர் காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் போலீஸ் வாகனம் முற்றிலுமாக சேதமடைந்தது.
நள்ளிரவு நேரம், அதிகாலையில் வாகன பயணத்தை தவிர்ப்பது நல்லது. வாகனம் ஓட்டுபவர் நூக்க கலக்கத்தில் சற்று அசந்தாலும் பெரும் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த விபத்து அதிகாலை நேரத்தில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
