பெங்களூர் யஸ்வந்துபூரில் இருந்து சேலம் செல்லும் பயணிகள் ரயில் நேற்று இரவு தருமபுரி ரயில் நிலையத்தில் உள்ள முதலாவது நடைமேடைக்கு வந்தடைந்தது. அப்பொழுது ரயிலின் ஐந்தாவது பெட்டியின் கீழ் உள்ள சாக்கப்சாரில் உள்ள ஸ்பிரிங் தீப்பிடித்து எரிந்தது. இதனைக் கண்ட ரயில்வே பாதுகாப்பு படையினர், ரயில் ஓட்டுநருக்கு தகவல் தெரிவித்தனர்.
தொடர்ந்து ரயில்வே காவல் துறையினர், ரயில்வே ஊழியர்கள் இணைந்து தீயை அணைத்தனர். இதனைத் தொடர்ந்து தீ முழுவதுமாக அணைக்கப்பட்டு, 47 நிமிடங்கள் கால தாமதமாக பேசஞ்சர் ரயில் தருமபுரியில் இருந்து சேலம் நோக்கி புறப்பட்டது.
மேலும் பேசஞ்சர் ரயில் பெட்டியில் தீப்பிடித்தது கண்டறிந்ததால் உடனடியாக தீயை அணைத்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் பேசஞ்சர் ரயிலில் திடீரென தீப்பிடித்ததால் பயணிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
