பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி அதிரடியாகக் குறைப்பு!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் நில்வி வருகிறது. இதன் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால்  பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரக் கூடிய சூழல் நிலவி வந்தது. இந்நிலையில் பொதுமக்களுக்கும் எண்ணெய் நிறுவனங்களுக்கும் நிவாரணம் அளிக்கும் வகையில் மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்து அறிவிப்பு ஒன்றை இன்று (27.03.2026) வெளியிட்டுள்ளது. அதன்படி, பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ. 10 குறைக்கப்பட்டுள்ளது. 

அதே போன்று பெட்ரோல் மீதான கலால் வரி ரூ.13லிருந்து ரூ.3 ஆகவும், டீசல் மீதான வரி லிட்டருக்கு ரூ.10லிருந்து முழுமையாக (பூஜ்ஜியம்) நீக்கப்பட்டுள்ளதாகவும் நமத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த புதிய வரி விகிதங்கள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்ட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி  எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சர்வதேச கச்சா எண்ணெய் விலைகள் கடந்த ஒரு மாதத்தில் ஒரு பேரலுக்கு சுமார் 70 டாலரிலிருந்து 122 டாலராக கிடுகிடுவென உயர்ந்துள்ளன. இதன் விளைவாக, உலகம் முழுவதும் நுகர்வோருக்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளன. 

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சுமார் 30%-50%, வட அமெரிக்க நாடுகளில் 30%, ஐரோப்பாவில் 20% மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் 50% வரை விலைகள் உயர்ந்துள்ளன. மோடி அரசாங்கத்திற்கு இரண்டு விருப்பங்கள் இருந்தன -மற்ற எல்லா நாடுகளையும் போல பாரத குடிமக்களுக்கு விலையை கடுமையாக உயர்த்துவது, அல்லது சர்வதேச ஏற்ற இறக்கங்களிலிருந்து இந்திய குடிமக்களைப் பாதுகாக்க அரசாங்கமே அந்த நிதிச் சுமையைத் தாங்குவது. பிரதமர் மோடி, ரஷ்யா – உக்ரைன் மோதல் தொடங்கிய கடந்த 4 ஆண்டுகளாகத் தனது அரசாங்கம் கொண்டுள்ள உறுதிப்பாட்டிற்கு இணங்க, இந்திய குடிமக்களைப் பாதுகாக்க மீண்டும் தனது நிதி நிலையில் பாதிப்பை ஏற்படுத்திக்கொள்ள முடிவு செய்துள்ளார். 

சர்வதேச அளவில் விலைகள் உச்சத்தில் இருக்கும் இந்த நேரத்தில், எண்ணெய் நிறுவனங்களின் மிக அதிகப்படியான இழப்புகளை (பெட்ரோலுக்கு லிட்டருக்கு சுமார் ₹24 மற்றும் டீசலுக்கு லிட்டருக்கு ₹30) குறைப்பதை உறுதி செய்ய, அரசு தனது வரி வருவாயில் பெரும் இழப்பை ஏற்றுக்கொண்டுள்ளது. அதே நேரத்தில், பெட்ரோல் மற்றும் டீசலின் சர்வதேச விலைகள் விண்ணைத் தொட்டுள்ளதால் ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டுள்ளது; வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் எந்தவொரு சுத்திகரிப்பு நிலையமும் இந்த ஏற்றுமதி வரியைச் செலுத்த வேண்டும். இந்த மிகச் சரியான நேரத்திலான, துணிச்சலான மற்றும் தொலைநோக்கு பார்வை கொண்ட முடிவிற்காக கௌரவப் பிரதமர் நரேந்திர மோடி ஜி மற்றும்  நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு எனது நன்றிகள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Source link