பெட்ரோல், டீசல் விலையை மீண்டும் உயர்த்தியது பாக்.,

இஸ்லாமாபாத்: மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் போர் தொடுத்து வருகின்றன. ஒரு மாதத்துக்கும் மேல் போர் நீடிப்பதால், உலகம் முழுதும் கச்சா எண்ணெய்க்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அவற்றின் விலையும் உயர்ந்துள்ளன.

இந்நிலையில், நம் அண்டை நாடான பாக்., ஒரு மாதத்தில் இரண்டாவது முறையாக எரிபொருள் விலையை மீண்டும் உயர்த்தியுள்ளது. டீசல் விலை, 54.90 சதவீதமும், பெட்ரோல் விலை, 42.70 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, அந்நாட்டில் டீசல் விலை லிட்டருக்கு, 174 ரூபாயாகவும், பெட்ரோல் விலை லிட்டருக்கு, 153 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

போர் பதற்றத்தை சுட்டிக்காட்டி, கடந்த மாதம் டீசல் மற்றும் பெட்ரோல் விலையை, 20 சதவீதம் பாக்., உயர்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Source link