பெட்ரோல் விலை உயர்வால் திணறும் அமெரிக்கர்கள்

ஈரான் போர் காரணமாக உலகளவில் எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ள நிலையில், நேற்று அமெரிக்காவில் பெட்ரோல் விலை கடந்த 2022ம் ஆண்டுக்கு பின், முதன்முறையாக சராசரியாக 4 டாலரை தாண்டியுள்ளது.

ஒரு கேலன் எனப்படும் 3.78 லிட்டர் சாதாரண பெட்ரோலின் தேசிய சராசரி விலை தற்போது 4.02 டாலராக அதாவது இந்திய மதிப்பில் 378 ரூபாயாக உள்ளது.

இது போர் துவங்குவதற்கு முன் இருந்ததைவிட ஒரு டாலருக்கும் அதிகமாகும். சரக்கு மற்றும் டெலிவரி லாரிகளுக்கு பயன்படுத்தப்படும் டீசல் விலை, போர் துவங்குவதற்கு முன் ஒரு கேலன் விலை 353லிருந்து, தற்போது 512 ரூபாயாக உயர்ந்துள்ளது. போர் நீடித்தால் விலைகள் மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

அமெரிக்கா எண்ணெய் ஏற்றுமதி நாடாக உள்ளது. இருந்தாலும், எண்ணெய் ஒரு உலகளாவிய வணிக பொருள் என்பதால் விலையேற்றத்தில் இருந்து தப்பிக்க முடியாது என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

கடந்த 2022 ஜூனில் உக்ரைன் போரின் போது, அமெரிக்காவில் பெட்ரோல் விலை ஒரு கேலன் 470 ரூபாயை தாண்டியது.

சறுக்கிய

டிரம்ப்

செல்வாக்கு!

கடந்த மாதம் பிற் பகுதியில் நடத்தப்பட்ட பொது கருத்துகணிப்பின்படி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு அந்நாட்டு மக்களின் ஆதரவு கணிசமாக குறைந்துள்ளதாக ஏ-.எப்., போஸ்ட் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பல்வேறு கருத்து கணிப்புகளை மேற்கோள் காட்டி, நடத்தப்பட்ட ஆய்வில் டிரம்புக்கான அமெரிக்க மக்களின் ஆதரவு மைனஸ் 17 சதவீதமாக சரிந்துள்ளது. இது அமெரிக்க அதிபர் ஒருவரின் மிகக் குறைந்த மதிப்பீடாகும். கடந்த பிப்ரவரி இறுதியில் துவங்கிய ஈரானுடனான மோதல் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளே இந்த சரிவுக்கு காரணமாக கூறப்படுகிறது.

Source link