பெண்களுக்கான ஒதுக்கீடு அரசியல் ஆதாயம் பற்றியது அல்ல: கார்கேவுக்கு மத்திய அமைச்சர் பதில்

பெண்களுக்கு பாராளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களில் உள்ள சட்டசபையில் இடஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்ட திருத்த மசோதா, சிறப்பு கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

5 மாநில சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், பாஜக தலைமையிலான இந்த நடவடிக்கை, அரசியல் ஆதாயம் தேடுவதற்கானதாகும். மேலும், தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் சிறப்பு கூட்டம் என்பது தேர்தல் நன்னடத்தை விதியை மீறுவதாகும் என்று காங்கிரஸ் மற்றும் அதன் தேசிய தலைவர் கார்கே விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில் “பெண்களுக்கான இட ஒதுக்கீடு என்பது அரசியல் ஆதாயத்திற்கானதல்ல. அது கண்ணியம், பிரதிநிதித்துவம் மற்றும் பெண்களுக்கு உரிய அதிகாரமளித்தல் பற்றியது.

25 ஆண்டுகளுக்கும் மேலாக, நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் வாக்குறுதி நிறைவேற்றப்படாமலே நிலுவையில் இருந்து வந்தது. இது குறித்துப் பலமுறை விவாதிக்கப்பட்டபோதிலும், ஒருபோதும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. தற்போது, ​​மக்களவையிலும் மாநிலச் சட்டமன்றங்களிலும் பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட இடங்கள் உட்பட பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு வழங்கும் 106-வது அரசியலமைப்புத் திருத்தத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது” என்றார்.

Source link