பெண் மருத்துவருடன் தகராறு.. தடுக்க வந்த போலீசாருக்கும் அடி! கேரள மருத்துவர் கைது…

கஞ்சா வைத்திருந்ததாகக் கூறப்படும் புகாரில் தொடங்கி, பெண் மருத்துவருடனான மோதல், காவல்துறை அதிகாரி மீதான தாக்குதல் என அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கியுள்ளார் கேரளாவைச் சேர்ந்த 29 வயது மருத்துவர். கொல்லத்தில் உள்ள தனியார் விடுதியில் நடந்த இந்தச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட அஜாஸ் கானை, நீதிமன்றம் 14 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

விடுதி அறையில் போலீசார் நடத்திய சோதனையில் 6 கிராம் கஞ்சாவும், அதைப் புகைக்கப் பயன்படுத்தும் காகிதமும் கிடைத்துள்ளன. இதையடுத்து, போதைப்பொருள் வைத்திருந்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் விசாரணை தீவிரமடைந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய பெண் மருத்துவர் அலீனா மார்கரெட் சகரியாவும் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமினில் வெளியே வந்துள்ளார்.

SHOCKING: Accused Slaps Lady Doctor Inside Police Presence

In Wardha Maharashtra, an accused named Qadir Ali slapped Dr. Shraddha Bhumre right inside a primary health center during medical examination.

Caught on CCTV this outrageous incident has sparked massive outrage among… pic.twitter.com/XjS2iYb8sz

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அஜாஸ் கான், கொல்லத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். எர்ணாகுளத்தைச் சேர்ந்த 28 வயதான அலீனாவுடன் அவர் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை கொல்லத்தில் உள்ள ஒரு தனியார் விடுதிக்குச் சென்றுள்ளார். அங்கு இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கடுமையான மோதலாக மாறியுள்ளது. இதனால் அலீனா கூச்சலிட்டதைத் தொடர்ந்து விடுதி ஊழியர்கள் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர்.

புகாரின் பேரில் அறைக்கு வந்த காவல் கட்டுப்பாட்டு அறை அதிகாரி கதவைத் திறக்க முயன்றபோது, அஜாஸ் அவரைத் தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியதாகப் புகார் எழுந்தது. இதனால் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு, அஜாஸ் கான் பிடிக்கப்பட்டார்.

பெண் மருத்துவரைத் தாக்கியது, காவல்துறை அதிகாரியைத் தாக்கியது, கஞ்சா வைத்திருந்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் அஜாஸ் கான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: “நானும் ரிஷிகாந்தும் ஒரே ஆள்தான்!” – நடிகர் மணிகண்டன் சொன்ன அந்த விஷயம்!