பெதுவாதஹாரி: ''தமிழக முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் மற்றும் பா.ஜ., இடையே ரகசிய உடன்பாடு இருக்கிறது,'' என,

பெதுவாதஹாரி: ”தமிழக முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் மற்றும் பா.ஜ., இடையே ரகசிய உடன்பாடு இருக்கிறது,” என, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகத்துடன் சேர்த்து, 294 தொகுதிகள் கொண்ட மேற்கு வங்க மாநிலத்திற்கு ஏப்., 23 மற்றும் ஏப்., 29 ஆகிய தேதிகளில், இரு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.

குற்றச்சாட்டு

இந்நிலையில், நாடியா மாவட்டத்தில், நேற்று திரிணமுல் காங்., வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்ட மம்தா பானர்ஜி, தமிழகத்தில் தி.மு.க., தலைவரும், முதல்வருமான ஸ்டாலினுடன், பா.ஜ., ரகசிய உடன்பாடு வைத்திருப்பதாக குற்றஞ்சாட்டினார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் பா.ஜ.,வுக்கு ரகசிய உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாகவே மேற்கு வங்கத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட அதிகாரிகளை தமிழகத்திற்கு தேர்தல் பார்வையாளர்களாக நியமித்துள்ளனர்.

அதற்கு பதிலாக, தங்களுக்கு சாதகமான அதிகாரிகளை மேற்கு வங்கத்தில் பா.ஜ., நியமித்துள்ளது. சட்டசபை தேர்தல் முடிந்ததும் நாடு முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கப் போகிறேன்.

லோக்சபா தேர்தலின் போது, வாக்காளர் பட்டியலை திருத்தாத பா.ஜ., சட்டசபை தேர்தலின்போது மட்டும் அதில் முறைகேடுகள் இருப்பதாக கூறி திருத்தி இருக்கிறது. அப்படி எனில், லோக்சபா தேர்தலில் தவறான வாக்காளர் பட்டியல் மூலம் வெற்றி பெற்ற பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பதவி விலக வேண்டும். அது தான் நியாயமாக இருக்கும்.

திறமையான அதிகாரி

மால்டாவில் தேர்தல் அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும், திரிணமுல் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட நபரை கைது செய்த ஐ.பி.எஸ்., அதிகாரியை, தேர்தல் பார்வையாளராக தமிழகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். திறமையான அதிகாரிகளை இங்கே பணியாற்ற விடுவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Source link