பெய்ரூட்: லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும், 20க்கும் மேற்பட்டோர்

பெய்ரூட்: லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் போர் நடத்தி வரும் நிலையில், ஈரானுக்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், லெபனானையும் இஸ்ரேல் தாக்கி வருகிறது. இதனால், பீதியடைந்த மக்கள் வசிப்பிடங்களை விட்டு வெளியேறி வருகின்றனர்.

இந்த நிலையில், தெற்கு சிடோனில் உள்ள அட்லோன் நகரிலும், பாலஸ்தீன அகதிகம் முகாம் மீதும் இஸ்ரேல் இன்று தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், 6 பேர் உயிரிழந்துள்ளனர். 4 பேர் காயமடைந்தனர். அதேபோல, ஹபூஷ் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் மேலும் 3 பேர் கொல்லப்பட்டனர். 18 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Source link