‘பெரம்பூரிலிருந்து பிரசாரத்தை தொடங்கும் தவெக தலைவர் விஜய்!’ – திட்டம் என்ன? |TVK Leader Vijay to Launch Campaign from Perambur – What’s the Strategy?”

இதற்காக தவெகவின் நிர்வாகக்குழு உறுப்பினர் செங்கோட்டையன் விஜய்யின் பிரசார திட்டத்தோடு நேற்று தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை சந்தித்திருந்தார். நீலாங்கரை வீட்டிலிருந்து புறப்படும் விஜய் காலை 10 மணிக்கு பெரம்பூரின் MKB நகரின் பஸ் டெப்போ அருகே முதல் பாய்ன்ட்டில் பேசுகிறார்.

அதைத் தொடர்ந்து கொளத்தூரின் செந்தில் நகரிலும், வில்லிவாக்கம் ஐ.சி.எஃப் சிக்னல் அருகேயும் அண்ணாநகர் ரவுண்டானாவிலும் கோயம்பேடு மேம்பாலம் அருகேயும் என 5 பாய்ன்ட்டுகளில் விஜய் பேசவிருக்கிறார். தவெக சார்பில் கொடுக்கப்பட்ட மனுவுக்கு தேர்தல் ஆணையம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. மொத்தம் 5 பாய்ன்ட்டுகளில் 47 கி.மீ தூரத்துக்கு பயணித்து விஜய் பேசவிருக்கிறார். ஒவ்வோர் இடத்திலும் 3000 முதல் 5000 பேர் வரைக்கும் கூடுவார்கள் என தவெக தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.

பெரம்பூரில் விஜய், கொளத்தூரில் வி.எஸ்.பாபு, வில்லிவாக்கத்தில் ஆதவ், அண்ணாநகரில் ராம் குமார், விருகம்பாக்கத்தில் சபரி ஆகியோர் தவெக சார்பில் போட்டியிடவிருக்கின்றனர்.

Source link