பெரிய அரிவாளுடன் கோபமாக செல்லும் ‘கர’ தனுஷ்!

போர்த் தொழில் பட இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கர’. வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் மமிதா பைஜூ, கே.எஸ்.ரவிகுமார், கருணாஸ், ஜெயராம், சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் ஆக்‌ஷன் த்ரிலர் ஜானரில் உருவாகியுள்ளது. இப்படம் ஏப்ரல் 30ஆம் தேதி வெளியாகிறது. தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது. சமீபத்தில் முதல் பாடலான‘வாயா கர சாமி’ சமீபத்தில் வெளியாகியிருந்தது. 

படத்தின் டைட்டில் ரிலீஸ் வீடியோ கடந்த பொங்கலன்று வெளியாகியிருந்தது. அந்த வீடியோவில், தனுஷ், ஒருவன் விதைத்த விதையை அவன் தான் அறுத்தாக வேண்டும் எனவும் நான் விதைத்த விதையை அறுவடை செய்யும் நேரம் வந்துவிட்டதாகவும் ஆனால் அதற்கு முன்னால் தன் மேல் இருக்கும் கரையை துடைக்க வேண்டும் என்றும் தன்னை நம்பி இருப்பவர்களை கரை சேர்க்க வேண்டும் எனவும் வசனம் பேசி ஒரு பழிவாங்கல் நடவடிக்கையை மேற்கொள்வது போல் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. மேலும் தனுஷின் பெயர் ரிவீல் செய்யப்பட்டிருந்தது. அதாவது அவர் பெயர் கரசாமி என்றும் அவரை கர என கூப்பிடுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதையடுத்து படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பெயர்களும் அவரது போஸ்டர்களும் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டிருந்தது. அதாவது செல்லி என்ற கதாபாத்திரத்திலும் மமிதா பைஜூவும் கந்தசாமி என்ற கதாபாத்திரத்தில் கேஎஸ் ரவிக்குமாரும் பரதன் என்ற கதாபாத்திரத்தில் சுராஜ் வெஞ்சரமூடுவும் காசி மாயன் என்ற கதாபாத்திரத்தில் கருணாஸும் முத்து செல்வனாக ஜெயராமும் முருகேசன் என்ற கதாபாத்திரத்தில் பிரித்வி பாண்டியராஜனும் நடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இக்கதாபாத்திரத்தின் காட்சிகளைக் கொண்டு ஒரு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதில் கடைசியாக தனுஷ் பெரிய அரிவாள் எடுத்துச் செல்லும் கோபமான ஒரு காட்சி இடம் பெற்றுள்ளது. 

Source link