பெருங்குடி: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூரைச் சேர்ந்த கண்ணன் மகள் துர்கா தேவி 17.
இவர் மதுரை தெப்பக்குளம் பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். நேற்று காலை பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதுவதற்காக தந்தையுடன் டூவீலரில் பள்ளிக்குச் சென்றார். கண்ணன் ஒடூவீலரை ஓட்டிச் சென்றார். வலையங்குளம் பகுதியில் அல்லிக்குளத்திலிருந்து மதுரை நோக்கி சென்ற அரசு பஸ், டூவீலரில் மோதி மாணவி துர்கா தேவி கீழே விழுந்தார். அவர் மீது பஸ் ஏறி இறங்கியதால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கண்ணன் காயமடைந்தார். பெருங்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.
