பெர்லின்: ஜெர்மனியில் நடந்த மாநாட்டில் பங்கேற்க வந்த பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீரை, வழிமறித்து அடையாள

பெர்லின்: ஜெர்மனியில் நடந்த மாநாட்டில் பங்கேற்க வந்த பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீரை, வழிமறித்து அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும் என பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி உள்ளது.

ஜெர்மனியின் மியூனிக் நகரில் ஆண்டுதோறும் மியூனிக் பாதுகாப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. சர்வதேச பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு கொள்கை தொடர்பான முக்கிய நிகழ்வுகள் இம்மாநாட்டில் விவாதிக்கப்படும். இதன் 62வது மாநாடு கடந்த 13ம் தேதி துவங்கி இன்றுடன் நிறைவு பெறுகிறது.

இதில் 50க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள், அமைச்சர்கள் பங்கேற்றனர். உலக பாதுகாப்பு சூழல், ரஷ்யா – உக்ரைன் போல் உள்ளிட்ட பிராந்திய மோதல்கள், இந்தோ பசுபிக் பாதுகாப்பு விவகாரங்கள் விவாதிக்கப்பட்டது.

இம்மாநாட்டில் பங்கேற்க பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீர் தனது குழுவினருடன் வந்தார். அப்போது அவரது ஐடி கார்டை காட்டும்படி அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரி ஒருவர் கூறும் வீடியோ சமூக ஊடகத்தில் வெளியாகி உள்ளது.

அந்த வீடியோவில் ,” மாநாடு நடக்கும் அறை அருகே ஆசிம் முனீர் வந்த போது , அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர், ” நில்லுங்கள்…எங்கே உங்களது அடையாள அட்டை. அதனை திருப்பி காட்டுங்கள்,” எனக்கூறும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

போராட்டம்

இதற்கிடையே இந்த மாநாட்டில் பங்கேற்க ஆசிம் முனீருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதை எதிர்த்து சிந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அவரை மாநாட்டில் பங்கேற்க அழைத்தது அதிர்ச்சி அளிப்பதாக அந்த அமைப்பு தெரிவித்து உள்ளது.

Source link