'பேக்ஸ் சிலிக்கா' அமைப்பில் இந்தியா அமெரிக்க உறவில் ஒரு புதிய திருப்பம்

புதுடில்லி: முக்கிய கனிமங்கள், செமி கண்டக்டர், ஏ.ஐ., ஆகிய துறைகளில் கூட்டாக இணைந்து முன்னேறுவதற்கான ‘பேக்ஸ் சிலிக்கா’ கூட்டமைப்பில் இந்தியா முறைப்படி இணைந்தது.

மேற்கண்ட துறைகளில் மூலப்பொருள்கள் முதல் முழுமைபெற்ற தயாரிப்பு கள் வரையிலான தொடர் படிநிலைகளில் பரஸ்பரம் ஒத்துழைப்பை வழங்குவ தற்காக, இக்கூட்டமைப்பை அமெரிக்கா துவங்கியது.

ஏற்கனவே ஆஸ்திரேலியா, கிரீஸ், இஸ்ரேல், ஜப்பான், கட்டார், கொரியா, சிங்கப்பூர், இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் இதில் உறுப்பினர்களாக உள்ளன.

இந்நிலையில், டில்லியில் நடந்துவரும் ‘ஏ.ஐ., இம்பாக்ட்’ மாநாட்டில் இந்தியா இதில் இணைந்துள்ளது. மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் உள்ளிட்ட தலைவர்கள் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதன் வாயிலாக, இந்தியா- – அமெரிக்கா இடையிலான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப உறவு மேலும் வலுப்படும் என்று கூறப்படுகிறது.

இதுதவிர, இந்தியா -அமெரிக்கா இடையே முக்கிய தாதுக்கள், பாகங்கள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்த ஒப்பந்தத்தின் பிரகடனத்தில் ஒரு இணைப்பும் சேர்க்கப்படும் என தெரிகிறது.

இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், செமி கண்டக்டர் துறைக்கு இந்தியா 10 லட்சம் பொறியாளர்களை வழங்கும் என்றார்.

‘எல்லைக்கு அப்பாலிருந்து

விளக்குகளை அணைத்த பட்டன்”’

பேக்ஸ் சிலிக்கா நிகழ்வில், அமெரிக்க பொருளாதார இணையமைச்சர் ஜேக்கப் ஹெல்பர்க் பேசினார். அப்போது அவர், “இந்தியாவின் மாபெரும் நகரம் ஒன்று இருளில் மூழ்கியது. அதன் விளக்குகள் அணைக்கப்பட்டன. அதனை நாட்டின் எல்லைக்கு வெளியே இருந்து ஒரு பட்டனைத் தட்டி அணைத்திருக்கிறார்கள்,” என்று குறிப்பிட்டார்.

கடந்த 2020 அக்டோபர் 12ம் தேதி மும்பையில் திடீர் மின் தடை ஏற்பட்டது. மஹாராஷ்டிர மின்வாரியத்தின் சேவையகத்தில் இணைய தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதன் பின்னணியில் சீனா இருந்ததாகவும் நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது. அந்த பின்னணியை குறிப்பிட்டு, சீனாவை ஜேக்கப் ஹெல்பெர்க் சூசகமாக சுட்டிக்காட்டியதாக பேசப்படுகிறது.

“எங்கள் நண்பர்களும் கூட்டாளிகளும் தினசரி பொருளாதார கட்டாயப்படுத்தல் மற்றும் இணைய மிரட்டல்களை எதிர்கொள்கின்றனர்,” என்றும் ஜேக்கப் கூறினார். ஆனால், இக்குற்றச்சாட்டை சீனா தொடர்ந்து மறுத்து வருகிறது.

Source link