மோர்லஸ்: சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடரின் பைனலுக்கு, இந்தியாவின் அர்ஜுன், ரித்விக் ஜோடி முன்னேறியது.
மெக்சிகோவில் ஆண்களுக்கான சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர் நடக்கிறது. இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் அர்ஜுன், ரித்விக் ஜோடி, அர்ஜென்டினாவின் பகுவாண்டோ மெனா, மெக்சிகோவின் ரோட்ரிகொ மென்டஸ் ஜோடியை சந்தித்தது.
முதல் செட் ‘டை பிரேக்கர்’ வரை சென்றது. இதை இந்திய ஜோடி 7-6 என வென்றது. இரண்டாவது செட்டையும் ‘டை பிரேக்கர்’ வரை சென்று 7-6 வசப்படுத்தியது இந்திய ஜோடி. ஒரு மணி நேரம், 49 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் இந்திய ஜோடி 7-6, 7-6 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தது.
