பைனலில் இந்திய ஜோடி * சர்வதேச டேபிள் டென்னிசில்

துனிஷ்: துனிஷியாவில் டபிள்யு.டி.டி., கன்டெண்டர் தொடர் நடக்கிறது. கலப்பு இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இத்தொடரின் ‘நம்பர்-1’ அந்தஸ்து பெற்ற இந்தியாவின் மனுஷ் ஷா, தியா சிட்டாலே ஜோடி, சுவீடனின் மார்டின் பிரிஸ், பிலிப்பா பெர்காண்டு ஜோடியை எதிர்கொண்டது. இதன் முதல் செட்டை 11-4 என வென்ற இந்திய ஜோடி அடுத்த செட்டை 6-11 என இழந்தது. பின் 3, 4வது செட்டை 11-5, 12-10 என கைப்பற்றியது. முடிவில் இந்திய ஜோடி 3-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, பைனலுக்குள் நுழைந்தது.

ஆண்கள் இரட்டையர் அரையிறுதியில் இந்தியாவின் ஸ்நேகித், ஆகாஷ் ஜோடி, சக இந்தியாவின் மனுஷ் ஷா, ஹர்மீத் தேசாய் ஜோடியை எதிர்கொண்டது. இதில் மனுஷ் ஷா, ஹர்மீத் ஜோடி 3-2 என்ற செட் (9-11, 5-11, 11-7, 11-5, 11-8) கணக்கில் வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது.

பெண்கள் இரட்டையர் அரையிறுதியில் இந்தியாவின் தியா சிட்டாலே, யாஷஸ்வினி ஜோடி, சிண்ட்ரல்லா, சுதிர்த்தா ஜோடி தங்களது போட்டிகளில் தோற்று வெளியேறினர்.

Source link