பைனலுக்கு முன்னேறினார் ஆயுஷ் * ஆசிய பாட்மின்டனில்…

நிங்போ: ஆசிய சாம்பியன்ஷிப் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு பைனலுக்கு முன்னேறினார் ஆயுஷ் ஷெட்டி.

சீனாவின் நிங்போ நகரில், ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில், உலகின் ‘நம்பர்-25’ வீரர், இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, உலகின் ‘நம்பர்-1’ வீரர், நடப்பு சாம்பியன், பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற, தாய்லாந்தின் விதித்சர்னை எதிர்கொண்டார்.

முதல் செட்டை ஆயுஷ் 10-21 என எளிதாக இழந்தார். பின் சுதாரித்துக் கொண்ட இவர், அடுத்த செட்டை 21-19 என்ற கணக்கில் போராடி கைப்பற்றினார். தொடர்ந்து அசத்திய ஆயுஷ் ஷெட்டி, மூன்றாவது, கடைசி செட்டையும் 21-17 என வசப்படுத்தினார்.

ஒரு மணி நேரம், 15 நிமிடம் நீடித்த போட்டியின் முடிவில், ஆயுஷ் ஷெட்டி 10-21, 21-19, 21-17 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறினார்.

இன்று நடக்கும் பைனலில் 20 வயதான ஆயுஷ் ஷெட்டி, உலகின் ‘நம்பர்-2’ வீரர், சீனாவின் ஷி யு குயியை சந்திக்கிறார்.

1965க்குப் பின்…

ஆசிய சாம்பியன்ஷிப் தொடர் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பைனலுக்கு முன்னேறிய இரண்டாவது இந்திய வீரர் ஆனார் ஆயுஷ் ஷெட்டி. முன்னதாக 1965ல் தினேஷ் கன்னா பைனலுக்கு முன்னேறி இருந்தார்.

Source link