'பைலட்' கிளன் பிலிப்ஸ்

ஆக்லாந்து: நியூசிலாந்து அணி ‘ஆல் ரவுண்டர்’ கிளன் பிலிப்ஸ் 29. மைதானத்தில் அந்தரத்தில் பறந்து பந்தை ‘கேட்ச்’ செய்வதில் சிறந்தவர்.

களத்தில் மட்டுமல்ல, ஆகாயத்தில் பறப்பதிலும் வல்லவராக உள்ளார். கடந்த ஆண்டு காயம் காரணமாக 8 மாதம் போட்டிகளில் இருந்து விலகினார். அமைதியாக ஓய்வெடுப்பதற்குப் பதில், நீச்சல், ஜிம் பயிற்சியுடன், விமானம் ஓட்டவும் முறையாக கற்றுக் கொண்டார். 2025, செப்டம்பர் மாதம், தனியார் ‘பைலட்’ லைசன்ஸ் பெற்றார்.

இங்கிலாந்துக்கு எதிரான ‘டி-20’ தொடரில் ஓய்வு தரப்பட்ட நிலையில், சமீபத்தில் ‘செஸ்னா 172’ என்ற இலகு ரக விமானத்தை இயக்கிய பிலிப்ஸ், கச்சிதமாக தரையிறக்கிய வீடியோ வெளியானது.

தற்போது வர்த்தக ‘பைலட்’ லைசன்ஸ் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பிலிப்ஸ் வெளியிட்ட செய்தியில்,’ விமானம் ஓட்டுவதில் ஆர்வம் உள்ளது. கிரிக்கெட் வாழ்க்கைக்குப் பின் விமானி ஆவது தான் எனது முதல் தேர்வாக இருக்கும்,’ என தெரிவித்துள்ளார்.

Source link