வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை ஒட்டி ரேஷன் கடைகளில் சிறப்பு மளிகை தொகுப்பு வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் கடந்த சில வாரங்களாக இதே டாபிக் தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதுபற்றி நாளை நடைபெறும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்க வாய்ப்புள்ளது.
முதலமைச்சர் விஜய் தலைமையில் நாளை காலை 10.30 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் தமிழக அரசின் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் மூன்று முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை
புதிய தொழில் திட்டங்களுக்கு ஒப்புதல் வடகிழக்கு பருவமழை சீரமைப்பு பணிகள் சட்டம், ஒழுங்கு பராமரிப்பு
ரேஷன் கடைகளில் சிறப்பு மளிகை தொகுப்பு
இவை வழக்கமாக நடைபெறக்கூடிய விஷயங்கள் தான். கூடுதலாக ஒரு விஷயம் ஆலோசிக்கப்பட வாய்ப்பிருக்கிறது என்கின்றனர். அதுதான் தீபாவளி பண்டிகையை ஒட்டி ரேஷன் கடைகளில் சிறப்பு மளிகை தொகுப்பு. தீபாவளி என்றால் வீட்டில் இனிப்பு மற்றும் பலகாரங்கள் செய்து அனைவருக்கும் கொடுத்து மகிழ்வர்.
தீபாவளி பலகாரங்கள் செய்பொருட்கள்
வ.எண்
சமையல் பொருட்கள்
1 சமையல் எண்ணெய், நெய், சர்க்கரை, மைதா, கடலை மாவு, ரவை, உளுத்தம் பருப்பு, மிளகாய், மல்லி, சீரகம், சோம்பு, கடுகு, ஏலக்காய், முந்திரி, உலர் திராட்சை, பெருங்காயம்
முதல்வர் விஜயை குறிவைக்கும் கூட்டம்…இதெல்லாம் தேவையா?
தமிழக அரசு ஒதுக்கும் நிதி
இதில் 5க்கும் மேற்பட்ட பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பு ஒன்றை தயாரித்து பொதுமக்களுக்கு வழங்கினால் பெரிதும் உதவிகரமாக இருக்கும். மேற்சொன்ன அனைத்து பொருட்களையும் சேர்த்தால் எப்படியும் 500 முதல் 600 ரூபாய் வரை வந்துவிடும். இதை மொத்தமாக வாங்கினால் 100 ரூபாய்க்கு மேல் குறைத்து பெறலாம். இதற்கு தமிழக அரசு டெண்டர் விட்டு கொள்முதல் செய்ய வேண்டும்.
தமிழகத்தில் மொத்தம் 2.29 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் இருக்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் சிறப்பு மளிகை தொகுப்பு ஏற்பாடு செய்தால் எப்படியும் 900 கோடி ரூபாய்க்கும் மேல் நிதி ஒதுக்க வேண்டும்.
கைவிரிக்கும் அதிகாரிகள்- பொங்கலுக்கு தான் சான்ஸ்
தற்போதைய நிதி நெருக்கடியான சூழலில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு ரேஷனில் இலவச மளிகை தொகுப்பு வழங்க முன்வருமா? என்பது மில்லியன் டாலர் கேள்வி என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். இதுபற்றி கோட்டை வட்டாரத்தில் விசாரிக்கும் போது, தீபாவளிக்கு ரேஷன் கடைகள் மூலம் இலவச மளிகை தொகுப்பு விநியோகிக்கும் திட்டம் ஏதும் இதுவரை இல்லை என்றே பதிலளித்தனர். தீபாவளிக்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே இருப்பதால் மளிகை தொகுப்பு விஷயத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
முதலமைச்சர் விஜய் எடுக்கும் முடிவு
இதுபற்றி நாளை நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் அதிகாரிகள் மூலம் அமைச்சர்கள் முன்மொழிந்தால் முதலமைச்சர் விஜய் திட்டவட்டமாக ஒரு பதிலை அளிப்பார் என்று தெரிகிறது. வழக்கமாக பொங்கல் பண்டிகையை ஒட்டி தான் ரொக்கத் தொகை, சிறப்பு மளிகை தொகுப்பு உள்ளிட்டவை வழங்கப்படும். தற்போது முதல்முறை ஆட்சி பொறுப்பேற்றுள்ள தவெக அரசு மீது தீபாவளி பண்டிகையின் போதே சிறப்பு தொகுப்பிற்கான எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
தவெக அரசு அமல்படுத்திய திட்டங்கள்
அதேசமயம் அனைத்து மாநகர, நகர, புறநகர் பேருந்துகளில் பெண்களுக்கான இலவச பயணத் திட்ட விரிவாக்கம், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்ட விரிவாக்கம், தாய் மாமன் தங்க மோதிரம் ஆகியவற்றை அமல்படுத்தியதால் தமிழக அரசு அதிகப்படியான நிதியை செலவிட்டிருக்கிறது. இத்தகைய சுமைக்கு நடுவில் தீபாவளி சிறப்பு மளிகை தொகுப்பிற்கான சாத்தியக்கூறுகள் குறைவு என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Source link
