பொதுநோக்கத்துடன் விவாதிக்க வேண்டும்: சபாநாயகர் அறிவுறுத்தல் சபாநாயகர் அறிவுறுத்தல்

புதுடில்லி: டில்லி சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை துவங்கும் நிலையில், அதற்கான ஏற்பாடுகள் குறித்து சபாநாயகர் விஜேந்தர் குப்தா நேற்று ஆய்வு செய்தார்.

ஆய்வுக்குப் பின், விஜேந்தர் குப்தா கூறியதாவது:

டில்லி சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை துவங்கி 25ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விவாதம், உறுப்பினர்களின் நடத்தை ஆகியவை பொது நோக்கத்துடன் இருக்க வேண்டும்.

சட்டசபை மரபுகளை அனைத்து உறுப்பினர்களும் கடைப்பிடிக்க வேண்டும்.

சபை நடவடிக்கைகள் சுமுகமாக நடக்க பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் இடையே ஒருங்கிணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல, சட்டசபை செயல்பாடுகளை நவீனமயமாக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, அனைத்து உறுப்பினர்களின் மேஜைகளிலும் ‘டேப்லட்’ பொருத்தப்பட்டுள்ளன.

ஆய்வுப் பணிகளில் எம்.எல்.ஏ.,க்களுக்கு உதவ, ‘விதான் சாத்தி’ என்ற செயற்கை நுண்ணறிவு வாயிலாக உரையாடல் செயலி அறிமுகம் செய்யப்படும். மேலும், ஒவ்வொரு அமர்வின் தொடக்கத்திலும் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Source link