சுமார் 48 வினாடிகள் ரன் டைம் கொண்ட அந்த வீடியோவில் பொம்மை ஒன்றை ஸ்ட்ரெச்சர் மாதிரியான படுக்கை ஒன்றில் வைத்து, அதை அந்த பிஞ்சு கைகள் சுமந்து செல்கின்றன. “பொம்மையை கொண்டு வழக்கமாக விளையாடும் விளையாட்டுக்கான சூழலை தொலைத்த மழலைகளின் நிலை இது” என நெட்டிசன்கள் இந்த வீடியோ குறித்து கருத்து தெரிவித்துள்ளனர். “இந்த செயலுக்கான புரிதல் இல்லாத அவர்கள், தாங்கள் அன்றாட வாழ்வில் பார்ப்பதை செய்துள்ளனர்” என மற்றொருவர் தெரிவித்துள்ளார். ‘இந்த பூமியில் மிகவும் பாதிக்கப்பட்ட பிஞ்சு குழந்தைகள்’ என்றும், ‘உடனடி தேவை அமைதி’ என்றும் நெட்டிசன்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல் – காசா மோதல்: கடந்த 2023 அக்டோபரில் ஹமாஸ் தீவிரவாத அமைப்பினர் இஸ்ரேலில் நடத்திய தாக்குதலால் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்புக்கு இடையிலான மோதல் மிக தீவிரமானது. இதையடுத்து இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் பாலஸ்தீனத்தை சேர்ந்தவர்களில் சுமார் 72 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்.
