பொறுப்பற்ற அரசியல்! மேற்காசிய பிராந்தியத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. எனினும், வீட்டு உபயோகம் மற்றும்

பொறுப்பற்ற அரசியல்!

மேற்காசிய பிராந்தியத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. எனினும், வீட்டு உபயோகம் மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சமையல் காஸ் சிலிண்டர் கிடைப்பதில் எந்த தட்டுப்பாடும் ஏற்படவில்லை. இந்த விவகாரத்தில், காங்கிரசின் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பொறுப்பற்ற முறையில் அரசியல் செய்கிறார்.

மோகன் யாதவ் ம.பி., முதல்வர், பா.ஜ.,

இறக்குமதி செய்யுங்கள்! நம் நாட்டில் சமையல் காஸ் பற்றாக்குறையை சமாளிக்க, பிற நாடுகளில் இருந்து அவற்றை இறக்குமதி செய்வது உள்ளிட்ட மாற்று வழிகளை ஆராய்வதற்கான முயற்சிகளை, மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். எரிவாயு வினியோகத்தில் ஏற்படும் தடை, மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கக்கூடும். இதற்கு உடனடி தீர்வு காண வேண்டும் .

சித்தராமையா கர்நாடக முதல்வர், காங்கிரஸ்

ஏன் மவுனம் காக்கின்றனர்?

ரோம் நகரம் எரிந்தபோது, அதன் மன்னர் நீரோ எப்படி மகிழ்ச்சியுடன் வயலின் வாசித்தாரோ அதுபோல், தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அரங் கேறும்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் ‘ரீல்ஸ்’களை வெளியிட்டு வருகிறார். பெண்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் கூட்டணி கட்சி தலைவர்கள் ஏன் மவுனம் காக்கின்றனர்?

சி.ஆர்.கேசவன் தேசிய செய்தித் தொடர்பாளர், பா.ஜ.,

Source link