'போக்சோ' குற்றங்கள்

ஆசிரியருக்கு ‘கம்பி’

சீர்காழி: ம யிலாடுதுறை மாவட்டம், ஓடக்கரையைச் சேர்ந்தவர் மணிமாறன், 59; ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியர். இவர், மார்ச் 13ம் தேதி மதியம், பக்கத்து கிராமத்தில் உள்ள மற்றொரு பள்ளியில் படிக்கும், 13 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். சிறுமியின் பெற்றோர் புகாரில், சீர்காழி அனைத்து மகளிர் போலீசார், ‘போக்சோ’வில் வழக்கு பதிந்து, மணிமாறனை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

டிரைவருக்கு ‘காப்பு’

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், காரப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல், 19; டிரைவர். இவர், 16 வயது சிறுமியை கடத்தி சென்று, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், மார்ச் 9ம் தேதி ஊத்தங்கரை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தனர். ‘ போக்சோ’வில் சக்திவேலை போலீசார், நேற்று முன்தினம் கைது செய்தனர்.

வங்கி ஊழியர் சிக்கினார்

திருநெல்வேலி: விருதுநகர் மாவட்டம், சாத்துார் அருகே வன்னிமடை பகுதியைச் சேர்ந்தவர் கணேசமூர்த்தி, 45. இவர் திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றினார். அதே பகுதியைச் சேர்ந்த, 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. போலீசார், விசாரித்து, அவரை போக்சோவில் கைது செய்தனர்.

Source link