நமது நிருபர்
தமிழகம், தேசிய மற்றும் சர்வதேச அளவில் இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகள். இன்று (மார்ச் 26) நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்திகள் என்னென்ன?
அது எத்தனை மணிக்கு என்பது குறித்து ஓர் சிறப்பு அலசல். அனல் பறக்கும் அரசியல் களத்தில் இன்றைய முக்கிய நிகழ்வுகள் என்னென்ன? மேலும் தொடர்ந்து விவரங்களை அறிய தினமலர் இணையதளம் தொடர்ந்து படியுங்கள்.
* வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றே கடைசி நாள்; இறுதிப் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், உடனடியாக விண்ணப்பித்தால் மட்டுமே துணை பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டு வரும் தேர்தலில் வாக்களிக்க முடியும். தமிழகத்தில் இதுவரை 3 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர்.
* கேரளம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய 3 மாநிலங்களில் நடைபெறும் சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர்கள், வேட்பு மனுவை திரும்பப் பெற இன்று (மார்ச் 26) கடைசி நாள். இன்று மாலை இறுதி வேட்பாளர்கள் பெயர் பட்டியல் வெளியிடப்படும்.
* விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் இன்று காலை தேர்தல் அறிக்கையை பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிடுகிறார்.
* தமிழக மாநில காங்கிரஸ் வேட்பாளர்களை இன்று காலை 11.30 மணிக்கு அக்கட்சி தலைவர் ஜி.கே.வாசன் அறிவிக்கிறார். தேஜ கூட்டணியில் கிள்ளியூர், ஒட்டன்சத்திரம், கும்பகோணம், ஈரோடு மேற்கு, ராணிப்பேட்டை ஆகிய 5 தொகுதிகள் தமாகாவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
* கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை, தி.மு.க., தலைமை இன்று அறிவிக்க உள்ளது. இதன் பிறகு திமுக எந்த தொகுதிகளில் தேர்தலில் களம் காணுகிறது என்பது தெரியவரும்.
* சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாக வாய்ப்பு உள்ளது. ஏற்கெனவே 23 பேர் கொண்ட பட்டியல் அறிவிக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள தொகுதிகளில் போட்டியிடுவோர் விவரங்கள் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
