நாகையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தவெக நிர்வாகி கைது பூபாலன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை அறிக்கை வெளிவந்ததில் இருந்து எதிர்கட்சிகள் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை விமர்சித்து வருகின்றனர்.
நாகை மாவட்டத்தில் தவெக நிர்வாகிக்கு சொந்தமான வீட்டில் 135 கிலோ விலை உயர்ந்த மெத் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் அதிகாரிகரிகள் பூபாலினின் வீட்டில் சோதனை மேற்கொண்டு, சுமார் 100 கோடிக்கும் அதிகம் மதிப்பிலால 135 கிலோ மெத்தபெட்டமைன் போதைப் பொருள்களை கைப்பறினர். இந்நிலையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா என்பதால் தற்போது அவரை சுற்றி சர்ச்சைகள் எழ தொடங்கியுள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் தற்போது விசாரணைக் தகவல்கள் வெளியாகி, மேலும் பல உண்மைகளை வெளிக் கொண்டு வந்துள்ளன. நாகை கடற்பகுதியிலிருந்து இலங்கைக்கு மெத்தபெட்டமைன் போன்ற உயர் ரக போதைப்பொருளைக் கொண்டு சென்று, நடுக்கடலில் இலங்கையிலிருந்து வரும் படகுகளுக்கு கை மாற்றி, அங்கிருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
அதிரடிச் சோதனை
வேளாங்கண்ணி அருகே உள்ள பிரதாபராமபுரத்தைச் சேர்ந்த சுகன் (எ) சுதாகன் என்பவரது வீட்டில் மெத்தபெட்டமைன் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் திருச்சி மண்டல அதிகாரிகள் 16 பேர் கொண்ட குழுவினர் சுகனின் வீட்டில் அதிரடிச் சோதனை நடத்தினர்.அப்போது இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 135 கிலோ மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் ரூ.270 கோடி இருக்கும் எனக் கூறப்படுகிறது.
பூபாலன் வீட்டில் சோதனை
சுகன் வீட்டில் இருந்த அவரது நண்பர்களான மணிகண்டன், சதீஷ்குமார் ஆகியோரிடம் நடத்திய விசாரணையில், இக்கடத்தலில் தவெக நிர்வாகி பூபாலனுக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது. உடனடியாக பூபாலன் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி விசாரணை மேற்கொண்டனர். இந்தக் கடத்தல் நெட்வொர்க்கிற்கு பூபாலர்தான் மூளையாகச் செயல்பட்டுள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
வெளிவந்த தகவல்
வட மாநிலங்களில் இருந்து வேதி மூலப்பொருட்களை ரகசியமாக கொண்டு வந்து, நாகையில் உள்ள வீட்டில் வைத்து இந்த போதைப்பொருளை தயாரித்து வந்தது அம்பலமாகியுள்ளது. நாகை மாவட்டம் மட்டுமின்றி, வேறு சில கடலோர மாவட்டங்கள் வழியாகவும் இந்த போதைப்பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்படுகிறது ஐரோப்பிய நாடுகளுக்கும் மத்திய ஆசிய நாடுகளுக்கும் சர்வதேச அளவில் இந்த மெத்தபெட்டமைன் கடத்தப்பட்டு வந்துள்ளது. இந்த நெட்வொர்க்கின் வேர்கள் மிகவும் ஆழமானவை என்பதால், இதன் பின்னணியில் உள்ள முக்கிய புள்ளிகள் மற்றும் சர்வதேச கடத்தல் கும்பலைச் சேர்ந்த பலரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா
போதைப்பொருளைக் கடத்தத் திட்டமிட்ட இடமான நாகை துறைமுகம் தமிழ்நாடு கடற்சார் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இவ்வாரியம் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் கீழ் வருகிறது. அத்துறையின் அமைச்சராக ஆதாவ் அர்ஜூனா செயல்பட்டு வருகிறார். இதனால் இவ்வளவு பெரிய ஆபத்தான போதைப் பொருள் கடத்தலை தவெக நிர்வாகி ஒருவர் துணிந்து செய்கிறார் என்றால் இதற்கு யார் உடந்தை என எதிர்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றனர்.
தவெகக்கு பணப்பரிமாற்றம்?
த.வெ.க நிர்வாகி பூபாலன், த.வெ.க அரசு பதவியேற்ற பின்னர் பல நூறு கோடி மதிப்பிலான ‘International Drug Mafia’-வாக உருவெடுத்ததன் பின்னணி என்ன? 137 கிலோ ‘மெத்’ போதைப்பொருளைக் கொள்முதல் செய்யப் பூபாலனுக்குக் கோடிக்கணக்கில் நிதியுதவி செய்த அந்த ‘Financier’ யார்? எங்கிருந்து இந்த சரக்கு உள்ளே வந்தது? பூபாலனோடு தொடர்பில் இருந்த அந்த மேலிடம் யார் யார்? கடந்த 5 மாதங்களில் இதுபோன்று எத்தனை முறை கடத்தல் நடந்துள்ளது? போதை மாஃபியாக்களுக்கும், தவெக கட்சிக்கும் இடையே சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் (Money Laundering) நடந்துள்ளதா? என திமுக ஐடி விங் சரமாரியாக கேள்வி எழுப்பி, இதனை கண்டறிய மத்திய அரசு உடனடியாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறித்தியுள்ளனர்.
Source link
