போபால்: மத்திய பிரதேசத்தில் சரக்கு வாகனம் பஸ் மீது மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.
மத்திய பிரதேசத்தில் சிந்த்வாராவில் பஸ் மீது சரக்கு வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் மற்றும் போலீசார் விரைந்தனர். இந்தச் சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்தனர். இவர்களில் ஆண்கள் 6 பேர், பெண்கள் 3 பேர், ஒரு குழந்தை அடங்குவர். மேலும் காயம் அடைந்த 31 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இதில் ஆறு பேரின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. முதல்வர் மோகன் யாதவ் கலந்துகொண்ட பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு திரும்பி கொண்டிருந்த போது நேற்று மாலை (மார்ச் 26) விபத்து நிகழ்ந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
