போராட்டம் வாபஸ் என சி.ஜே.பி. அறிவிப்பு

மத்திய அரசுடனான பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவு என சி.ஜே.பி. தகவல் தெரிவித்து உள்ளது. 36 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டத்தை விலக்கிக் கொள்வதாகவும் அறிவித்து உள்ளது. நாடு முழுவதும் நடைபெறும் மாணவர்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அறிவித்துள்ளது. 3ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் தங்களின் 3 முக்கிய கோரிக்கைகளையும் அரசு ஏற்பதாக உறுதி அளித்ததால் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்து உள்ளது.

4 வாரத்திற்கு பின் மீண்டும் பேச்சுவார்த்தைகரப்பான் பூச்சி ஜனதா கட்சியினருடன் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை 4 வாரங்களுக்கு பின் நடைபெறுமென மத்திய அரசு கூறி உள்ளது. கல்வித்துறையில் சீர்திருத்தங்கள் குறித்து அடுத்த கட்ட பேச்சுவார்த்தை என்றும் அறிவித்து உள்ளது.

வழக்குகள் அனைத்தும் வாபஸ் – மத்திய அரசுபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் என மத்திய அரசு அறிவித்து உள்ளது. நீட் தேர்வால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கவும் ஒப்புதல் அளித்து உள்ளது. கரப்பான் பூச்சி ஜனதா கட்சி முன் வைத்த மூன்று கோரிக்கைகளையும் அரசு ஏற்றுள்ளதாக சி.ஜே.பி. செய்தி தொடர்பாளர் அசுதோஷ் ரங்கா தகவல் தெரிவித்து உள்ளார். மத்திய அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தைக்கு பின்னர் இதனை அவர் அறிவித்தார்.

“கரப்பான்கள் ஒன்றாக சேர்ந்தால்?”உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த், வழக்கு ஒன்றின் வாதத்தில் வேலை இல்லாத இளைஞர்களை கரப்பான்பூச்சிகள் என குறிப்பிட்டார்.தனது கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக நீதிபதி சூரியகாந்த் பதில் கூறும் முன்பாகவே உதயமாகிவிட்டது ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’மே 16ல் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியை நிறுவினார் அமெரிக்காவில் வசித்துவந்த இந்தியரான அபிஜித் தீப்கே

நீட் தேர்வு முறைகேடு, போராட்டம்…மே 3ஆம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வு, வினாத்தாள் கசிந்ததாக கூறி 9 நாட்களுக்குப் பின் ரத்து செய்யப்பட்டது. இது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், பிரச்னையை, கரப்பான்பூச்சி ஜனதாகட்சி கையில் எடுத்தது. இந்தியா வந்த அபிஜித் தீப்கே, ஜந்தர் மந்தரில் ஜூன் 6 முதல் தனது இளைஞர் பட்டாளத்துடன் போராட்டத்தை தொடங்கினார்.

உண்ணாவிரத போராட்டம்…சமூக செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் ஜூன் 28ல் CJP-ன் போராட்டத்தில் இணைந்தார், அதைத்தொடர்ந்து போராட்டம் இந்திய அளவில் கவனம் பெற்றது. சமூக வலைதளங்களை CJP மிகப்பெரும் கருவியாக பயன்படுத்தி போராட்டத்தை மேன்மேலும் தீவிரப்படுத்திய நிலையில், கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்குப் பின் போராட்டத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது.

தர்மேந்திர பிரதான் ராஜினாமா கரப்பான் பூச்சிகள் ஒன்றாக சேர்ந்தால்? என அபிஜித் தீப்கே அன்று எழுப்பிய ஒற்றைக் கேள்வியால் இன்று மத்திய அமைச்சரின் பதவி பறிபோயுள்ளது.மாணவர் போராட்டத்திற்கு பணிந்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்துள்ளார்

தர்மேந்திர பிரதானின் அரசியல் பயணம்1983 – அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) அமைப்பில் இணைந்தார்2000 – ஒடிசாவின் பல்லஹாரா தொகுதியில் MLA ஆக வெற்றி 2004 – ஒடிசா, தேவ்கார் தொகுதியிலிருந்து மக்களவை உறுப்பினர்2004 – 2006 – பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா (BJYM) தேசியத் தலைவராக பணியாற்றினார்2014 – 2021 – பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர்2021 – திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சர்2021 ஜூலை – இன்று வரை – மத்திய கல்வித்துறை அமைச்சர்நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மாணவர் போராட்டம் வெடித்ததால் இன்று பதவி விலகினார்.

              

Source link