இஸ்லாமாபாத்: மேற்காசியாவில் நிலவி வரும் பதற்றங்கள் குறித்து விவாதிக்க சவுதி அரேபியா, எகிப்து மற்றும் துருக்கியைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர்கள் பாகிஸ்தான் வந்தடைந்தனர்.
மேற்காசியாவில் நடந்து வரும் மோதல்களை தணிப்பதற்கான வழியைக் கண்டறியவும், அமைதியை நிலைநாட்டவும் பாகிஸ்தான் முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இதற்காக மேற்காசிய நாடுகளான சவுதி அரேபியா, எகிப்து மற்றும் துருக்கியைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்கும் இரண்டு நாள் உச்சி மாநாட்டிற்கு பாகிஸ்தான் ஏற்பாடு செய்துள்ளது.
இந்த உச்சி மாநாடு அந்நாட்டின் தலைநகர் இஸ்லாமாபாதில் நேற்று துவங்கியது.
இதில் பங்கேற்பதற்காக எகிப்து வெளியுறவு அமைச்சர் பத்ர் அப்தெலாட்டி மற்றும் துருக்கி வெளியுறவு அமைச்சர் ஹக்கான் பிடான் ஆகியோர் நேற்று முன்தினம் பாகிஸ்தான் வந்தனர்.
சவுதி அரேபி யா வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் பர்ஹான் நேற்று பாகிஸ்தான் வந்தடைந்தார்.
உச்சி மாநாட்டின் ஒருபகுதியாக, நேற்று எகிப்து மற்றும் துருக்கி அமைச்சர்களுடன் தனித்தனியே பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தர் இரு தரப்பு பேச்சு நடத்தினார். சவுதி அமைச்சருடனும் தனியாக பேச்சு நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது-
மேலும், இதில் பங்கேற்க வருகை தந்துள்ள அமைச்சர்கள், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பையும் சந்தித்து பேச்சு நடத்துவார்கள் என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள் ளது-.
