ம த்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழல் காரணமாக, டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 98 ரூபாய் வரை வீழ்ச்சியடைய வாய்ப்பு உள்ளதாக ஆய்வு நிறுவனமான ‘பெர்ன்ஸ்டைன்’ கணித்துள்ளது.
மேலும் தெரிவித்துள்ளதாவது:
தற்போது ரூபாய் மதிப்பு 94ஆக உள்ள நிலையில், போர் நீடித்தால் இது 110 ரூபாயாக வீழ்ச்சியடையக்கூடும். போர் விரைவில் முடிந்தாலும் கூட, நடப்புக் கணக்கு பற்றாக்குறை காரணமாக, இந்த ஆண்டு ரூபாய் மதிப்பு 98ஆக சரிய வாய்ப்புள்ளது.
பங்கு சந்தையை பொறுத்தவரை, இயல்பான சூழல் நிலவினால், இந்த ஆண்டு இறுதியில் நிப்டி 26,000 புள்ளிகளாக இருக்கும். போர் நீண்டால் 20,000 புள்ளிகளுக்கு கீழ் சரியும்.
இதுபோன்ற நெருக்கடி காலங்களில் அடிப்படை அம்சங்களை விட புவிசார் அரசியலே சந்தையை தீர்மானிக்கும்.
இவ்வாறு தெரிவித்து உள்ளது.
