போலி கல்வி நிறுவனங்களை நம்பி ஏமாற வேண்டாம்: மாணவர்களுக்கு யுஜிசி எச்சரிக்கை

எனினும், யுஜிசி விதி​முறை​களுக்கு முரணாக பல்​வேறு நிறு​வனங்​கள் பட்​டங்​களை வழங்கி வரு​வ​தாக புகார்​கள் கிடைக்​கப் பெற்​றுள்​ளன. இத்​தகைய பல்​கலைக்​கழகங்​கள், கல்வி நிறு​வனங்​கள் வழங்​கும் பட்​டங்​கள், யுஜிசி​யால் அங்​கீகரிக்​கப்​ப​டாது.

அவை உயர்​கல்வி மற்​றும் வேலை​வாய்ப்​புக்​கும் செல்​லுபடி​யா​காது. எனவே, உயர்​கல்விக்​காக சேர்க்கை பெறு​வதற்கு முன்​பு, அந்த கல்வி நிறு​வனம் அங்​கீகரிக்​கப்​பட்​டுள்​ளதா என்​பதை மாணவர்​கள், பெற்​றோர் உறுதி செய்​து​கொள்ள வேண்​டும்.

யுஜிசி அங்​கீ​காரம் பெற்ற பல்​கலைக்​கழகங்​கள், போலி உயர்​கல்வி நிறு​வனங்​களின் விவரங்​களை www.ugc.gov.in எனும் இணை​யதளத்​தில் சரி​பார்த்​துக் கொள்​ளலாம். ஏதேனும் பல்​கலைக்​கழகம் அல்​லது கல்வி நிறு​வனம் யுஜிசி விதி​களுக்கு முரணாக பட்​டங்​கள், படிப்​பு​களை வழங்​கு​வது தெரிய​வந்​தால், ug*****@***il.com என்ற மின்​னஞ்​சலுக்கு புகார்​களை அனுப்​பலாம்.

Source link