போலீஸ் அதிகாரி உதவியுடன் மகளை ஆணவக் கொலை செய்த தந்தை | Andhra Pradesh – Father Commits Honor Killing of Daughter with the Help of a Police Officer

ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் மாச்சர்லாவை சேர்ந்த வியாபாரி சந்திர சீனு. இவர்களது மகள் சவுடேஸ்வரி (வயது 22) நாகராஜ் என்பவரை காதலித்தார்.

அரசு ஆசிரியருடன் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் பெற்றோர் எதிர்ப்பை மீறி சவுடேஸ்வரி வீட்டை விட்டு வெளியேறி நாகராஜை திருமணம் செய்து கொண்டார்.

மகளை காணவில்லை என்றும், வீட்டில் இருந்து 25 பவுன் தங்க நகைகளையும் காணவில்லை என்றும் போலீசில் சீனு புகார் அளித்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து சவுடேஸ்வரியை தேடி வந்தனர். நாகராஜின் நண்பரிடம் விசாரணை நடத்தியதன் மூலம் அவர்கள் இருக்கும் இடத்தை அறிந்து போலீசார் நாகராஜ், சவுடேஸ்வரியை கண்டுபிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

Source link