கோவை: கோவையில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட ரவுடியை போலீசார் சுட்டுபிடித்தனர்.
கோவை மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து தொடர் வழிப்பறி சம்பவங்கள் நடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து தனிப்படை அமைத்து போலீசார் குற்றவாளியை தேடி வந்தனர்.
கோவை சூலூர் அருகே பதுங்கி இருந்த குற்றவாளியை போலீசார் பிடிக்க முயன்றனர். அப்போது அந்த நபர் போலீசார் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. இதனையடுத்து ரவுடியை போலீசார் சுட்டுப்பிடித்தனர். வலது காலில் குண்டு பாய்ந்த நிலையில் அவனை சிகிச்சைக்காக போலீசார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
பிடிபட்ட நபர் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பாலமுருகன் என தெரியவந்துள்ளது. இது குறித்து மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் விசாரணை நடத்தி வருகிறார்.
