மகளிருக்கு மாதம் ரூ.3,000 வழங்கப்படும் என பாஜக வாக்குறுதி

பெண்களுக்கு மாதம் ரூ.3,000 வழங்கப்படும் என்று பாஜக தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது.

மேற்குவங்கத்தில்…

மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டு கட்டங்களாக வரும் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. தேர்தலை முன்னிட்டு ஆளும் திரிணமூல் காங்கிரஸ், பாஜக, இடது முன்னணி கூட்டணி மற்றும் காங்கிரஸ் கட்சி தனித்தனியாக போட்டியிடுகின்றன. இந்தச் சூழலில் மேற்கு வங்க மாநில பாஜக தேர்தலை அறிக்கையை மத்திய அமைச்சர் அமித் ஷா வெளியிட்டார்.

பொது சிவில் சட்டம் பாஜக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்;

* பெண்களுக்கு மாதம் ரூ.3,000 வழங்கப்படும்* பாஜக ஆட்சிக்கு வந்த ஆறு மாத காலத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்* மத வழிபாடுகளின் சுதந்திரத்தை உறுதி செய்யும் சட்டம் இயற்றப்படும்

* 15 ஆண்டுகால திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியின் ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்குலைவையும் அம்பலப்படுத்தும் வகையில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்படும்* நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய ஊடுருவல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.* கால்நடை கடத்தலைத் தடுக்க கடுமையான சட்டம் இயற்றப்படும்

* மேற்கு வங்கத்தில் பாஜக அரசின் அனைத்து திட்டங்களும் அமல்படுத்தப்படும். இதில் ஆயுஷ்மான் பாரத் திட்டமும் அடங்கும்.* ஆட்சிக்கு வந்த 45 நாட்களில் 7ஆவது ஊதியக்குழு பரிந்துரையின்படி அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படும்* 7வது ஊதியக் குழு அமல்படுத்தப்படும்

* ஐந்து ஆண்டுகளில் ஒரு கோடி புதிய வேலைவாய்ப்புகள், சுயதொழில் வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும்* வேலையற்ற இளைஞர்களுக்கு ரூ.3,000 நிதி உதவி வழங்கப்படும்.* அரசியல் வன்முறை குறித்து ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைத்து விசாரிக்கப்படும்

* சட்டம் – ஒழுங்கு உறுதி செய்யப்படும். பெண்களுக்கான பிரத்யேக காவல்படை உருவாக்கப்படும்.* 33% இடஒதுக்கீடு வழங்குவதன் மூலம் பெண்களின் பாதுகாப்பு மற்றும் அதிகாரமளித்தல் உறுதி செய்யப்படும்இவ்வாறு பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link