சென்னை சென்ட்ரல் – கூடூர் ரயில் பாதையில் பெடபரியா மற்றும் நாயுடுபேட்டை இடையே நடைபெறவுள்ள பராமரிப்பு பணிகள் காரணமாகச் செப்டம்பர் 10-ம் தேதி சென்னை, சுள்ளூர்பேட்டை, நெல்லூர் மற்றும் ஆவடி வழித்தடங்களில் இயங்கும் 5 மெமு ரயில் சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன. அன்று மதியம் 12:20 முதல் மாலை 6:50 மணி வரை பாதை முடக்கம் அமல்படுத்தப்படுவதால், பயணிகள் மாற்றுப் பயணத் திட்டங்களை மேற்கொள்ளத் தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.
சென்னை சென்ட்ரல் – கூடூர் ரயில் பாதையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு பணிகள் காரணமாக, வரும் செப்டம்பர் 10-ம் தேதி சென்னை, சூலூர்பேட்டை, நெல்லூர் மற்றும் ஆவடி வழித்தடங்களில் இயங்கும் 5 மெமு (MEMU) மின்சார ரயில் சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பராமரிப்பு பணிகள் விவரம்:
சென்னை கோட்டத்திற்குட்பட்ட பெடபரியா மற்றும் நாயுடுபேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே பொறியியல் பராமரிப்பு பணிகளுக்காக மின்சார பாதை தடை அமல்படுத்தப்பட உள்ளது. இதற்காகச் செப்டம்பர் 10-ம் தேதி மதியம் 12:20 மணி முதல் மாலை 6:50 மணி வரை என மொத்தம் 6 மணி நேரம் 30 நிமிடங்களுக்குப் போக்குவரத்துப் பாதை முடக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரத்து செய்யப்படும் ரயில்களின் விவரம்:
ரயில் எண் 66039: மூர் மார்க்கெட் வளாகத்தில் இருந்து காலை 07:45 மணிக்குச் சூலூர்பேட்டை புறப்படும் மெமு ரயில்.
ரயில் எண் 66041: சூலூர்பேட்டையில் இருந்து காலை 10:00 மணிக்கு நெல்லூர் புறப்படும் மெமு ரயில்.
ரயில் எண் 66040: நெல்லூரில் இருந்து மாலை 04:00 மணிக்குச் சூலூர்பேட்டை புறப்படும் மெமு ரயில்.
ரயில் எண் 66042:சூலூர்பேட்டையில் இருந்து மாலை 06:40 மணிக்கு மூர் மார்க்கெட் வளாகம் புறப்படும் மெமு ரயில்.
ரயில் எண் 66003: மூர் மார்க்கெட் வளாகத்தில் இருந்து இரவு 09:25 மணிக்கு ஆவடி புறப்படும் மெமு ரயில்.
குறிப்பிட்ட இந்த நேரத்தில் பயணிகள் தங்கள் பயணத் திட்டத்தை மாற்றியமைத்துக் கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
