மதுரை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் போலீஸ் விசாரணையில் கொல்லப்பட்ட வழக்கில், நகை திருட்டு குறித்து புகார் அளித்த நிகிதா மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரானார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் திருமங்கலம் நிகிதா அளித்த நகை திருட்டு புகாரில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட காளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் சில மாதங்களுக்கு முன் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கில் நிகிதா அளித்த புகாரில் உண்மையில்லை என சி.பி.ஐ., தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
நகை திருட்டு குறித்து புகார் அளித்த நிகிதா மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரானார். நகை திருட்டு நடந்தது என்பதற்கு ஆதாரம் இல்லை. கண்டுபிடிக்க முடியவில்லை என புகாரை முடித்து சி.பி.ஐ. அறிக்கை தாக்கல் செய்தது. இதற்கு ஆட்சேபனை இல்லை என நீதிமன்றத்தில் நிகிதா தெரிவித்தார். இதை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.
