மதிமுக 4 தொகுதிகளிலும் உதய சூரியனில் போட்டி

சென்னை: மதிமுக சீர்காழி தொகுதியில் தனி சின்னத்தில் போட்டியிடுவதாக கூறியிருந்த நிலையில் தற்போது 4 தொகுதிகளிலும் உதயசூரியனில் போட்டியிடும் என வைகோ அறிவித்தார்.

தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மொடக்குறிச்சி தொகுதியில் செந்தில்நாதன், மதுரை தெற்கு தொகுதியில் பூமிநாதன், கடையநல்லூர் தொகுதியில் ராஜேந்திரன், சீர்காழி (தனி) தொகுதியில் செந்தில் செல்வன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

மதிமுக சீர்காழி தொகுதியில் தனி சின்னத்தில் போட்டியிடுவதாக கூறியிருந்த நிலையில் தற்போது 4 தொகுதிகளிலும் உதயசூரியனில் போட்டியிடும் என வைகோ அறிவித்துள்ளார். தனிச்சின்னத்தை கேட்டு பெறுவதில் தாமதம் நிலவுவதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. தற்போது உதயசூரியன் சின்னத்தில் களம் காணும் வேட்பாளர்களின் எண்ணிக்கை 176ஆக உயர்ந்துள்ளது.

Source link