மதுராபுர்: மேற்கு வங்கத்தில் பாஜ ஆட்சிக்கு வந்ததும் அங்குள்ள ஒவ்வொரு ஊடுருவல்காரரும் வெளியேற்றப்படுவது

மதுராபுர்: மேற்கு வங்கத்தில் பாஜ ஆட்சிக்கு வந்ததும் அங்குள்ள ஒவ்வொரு ஊடுருவல்காரரும் வெளியேற்றப்படுவது உறுதி என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறி உள்ளார்.

தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் பேசியதாவது;

மேற்கு வங்கம் ஊடுருவல்காரரின் சொர்க்கமாக மாறி இருக்கிறது. சட்ட விரோத குடியேற்றத்திற்கு ஆளும் மாநில அரசு அனுமதித்ததால் இங்கு மாநில பாதுகாப்பு என்பது சமரசம் செய்யப்பட்டு உள்ளது.

மேற்கு வங்கமானது ஒரு எல்லையோர மாநிலம். திரிணமுல் காங். ஊடுருவலை அனுமதிப்பதால் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாது. பாஜவால் மட்டுமே பாதுகாப்பை அளிக்க முடியும். இங்கு ஹிந்து அகதிகளில் ஒருவர் கூட தங்களின் குடியுரிமையை இழக்கமாட்டார்கள் என்று உறுதி அளிக்கிறேன்.

தற்போது வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் மட்டுமே நீக்கப்பட்டு உள்ளன. பாஜ அரசு அமைந்தவுடன் ஊடுருவல்காரர்கள் ஒவ்வொருவரையும் அடையாளம் கண்டு அகற்றுவோம்.

இங்கு ஊடுருவலும், ஊழலும் நிறுத்தப்படும். மக்கள் மீண்டும் திரிணமுல் காங்கிரசுக்கு வாக்களித்தால் மம்தா பானர்ஜி அல்ல, அவரின் மருமகன் அபிஷேக் பானர்ஜி தலைமையிலான அரசு இருக்கும்.

இவ்வாறு உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.

Source link