மதுரை சர்வதேச விமான நிலைய அறிவிப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது; பிரதமருக்கு இபிஎஸ் நன்றி

சென்னை: தென் தமிழகத்தின் சுற்றுலா, வணிக, பொருளாதார வளர்ச்சிக்கு மதுரை சர்வதேச விமான நிலைய அங்கீகாரம் பெரும் பங்காற்றும் என்று அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை;

மதுரை விமான நிலையத்திற்கு ‘சர்வதேச விமான நிலையம்’ அந்தஸ்து வழங்க ஒப்புதல் அளித்துள்ள பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையின் முடிவை அதிமுக சார்பில் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்.

தமிழகத்தின் கலாச்சார மையமாகவும், தென் தமிழகத்திற்கான முக்கிய இணைப்பாக விளங்கும் மதுரை மண்ணின் மக்கள் விடுத்த நீண்டநாள் கோரிக்கையினை ஏற்று, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பினை கொடுத்துள்ள பிரதமர் மோடிக்கு தமிழக மக்களின் சார்பில் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தென் தமிழகத்தின் சுற்றுலா, வணிக, பொருளாதார வளர்ச்சிக்கு இந்த சர்வதேச விமான நிலைய அங்கீகாரம் பெரும் பங்காற்றும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் இபிஎஸ் கூறியுள்ளார்.

Source link