மதுரை: 'பழையவர்களின் வாரிசுகள்; அதில் என்ன புதிது இருக்கிறது' என திமுக வேட்பாளர்கள் குறித்து நிருபர்கள்

மதுரை: ‘பழையவர்களின் வாரிசுகள்; அதில் என்ன புதிது இருக்கிறது’ என திமுக வேட்பாளர்கள் குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பதில் அளித்தார்.

மதுரையில் நிருபர்கள் சந்திப்பில், பல்வேறு கேள்விகளுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பதில் அளித்தார். அதன் விவரம் வருமாறு:

கேள்வி: தவெக வேட்பாளர்களை அறிவித்த விஜய், எம்எல்ஏக்கள் கொள்ளை அடிப்பவர்களாக இருக்கக்கூடாது மக்களை காப்பாளர்களாக இருக்க வேண்டும் என கூறியுள்ளாரே?

சீமான்: கட்சி தேர்தல் என்றால் வேட்பாளர் அறிவித்து தான் ஆக வேண்டும். அது ஒன்றும் பெரிய செய்தி இல்லை.

கேள்வி: திமுகவில் புது முகங்களுக்கு வேட்பாளராக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள்?

சீமான்: பழையவர்களின் வாரிசுகள் தான் அவர்கள். அதில் என்ன புதிது இருக்கிறது.

தேர்தலில் தவெக மற்றும் ஸ்டாலின் சாருக்கும் இடையே இரண்டு முனைப்போட்டி தான் என விஜய் கூறியுள்ளார் என்ற கேள்விக்கு சிரித்துக் கொண்டே பதில் அளிக்காமல் சீமான் புறப்பட்டு சென்றார்.

Source link