மதுரை: மதுரையில் கள்ளச்சந்தையில் விற்க வேண்டும் என்பதற்காக காஸ் சிலிண்டர் பதுக்கிய இரண்டு பேரை போலீசார்

மதுரை: மதுரையில் கள்ளச்சந்தையில் விற்க வேண்டும் என்பதற்காக காஸ் சிலிண்டர் பதுக்கிய இரண்டு பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். நாடு முழுவதும் எஸ்மா சட்டம் அமல்படுத்திய நிலையில் சிலிண்டர் பதுக்கலுக்கு தமிழகத்தில் முதல்முறையாக அவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஈரான் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதல் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை அந்நாடு மூடியுள்ளது. இதனால், உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. நம் நாட்டில் வீட்டு பயன்பாட்டுக்கான சமையல் சிலிண்டர் விலை, சமீபத்தில் 60 ரூபாய் உயர்த்தப்பட்டது. மும்பை, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட நகரங்களில் வணிக ரீதியிலான சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.. எனவே, சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க, அவசர ஏற்பாடாக, ‘எஸ்மா’ எனப்படும் அத்தியாவசிய பொருட்கள் பராமரிப்பு சட்டத்தை நாடு முழுதும் மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.

இந்நிலையில்,மதுரையில் காஸ் சிலிண்டர் பதுக்கியதாக இரண்டு பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். கோவில்பாப்பாக்குடி பகுதியை சேர்ந்த பழனி என்பவரிடம் இருந்து 109 வணிக பயன்பாட்டு சிலிண்டர் உட்பட 209 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மதன்குமார் என்பவரிடம் இருந்து 126 வணிய பயன்பாட்டு 63 சிலிண்டர் உட்பட 189 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Source link