மதுரை மத்திய தொகுதியில் சுந்தர்.சி போட்டியால் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு ‘டஃப்’

மத்திய தொகுதியில் முஸ்லிம்கள் அதிகம் நடிகை குஷ்பு அச்சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அவரது பிரச்சாரம் எடுபட வாய்ப்புள்ளது. சுந்தர்.சி-க்காக அவரது ஆதரவு நடிகர், நடிகைகள் மற்றும் அதிமுக ஆதரவு நடிகர் பட்டாளம் களமிறங்கும். அதனால், தேர்தல் முடியும் வரை, மதுரை மத்திய தொகுதி மாநில அளவில் கவனம் பெறம்’ என்றனர்.

வேட்பாளரானது எப்படி ?: ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சுந்தர்.சி, 37-க்கும் அதிகமான படங்களை இயக்கி உள்ளார். 15-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது படங்களில் பெரும்பாலும் காமெடி குடும்ப பாங்கான ஜனரஞ்சகமான கதைகளுக்கு தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். முறைமாமன் படத்தை இயக்கியபோது, அதில் நடித்த குஷ்புவை காதலித்து திருமணம் செய்தார்.

இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். குஷ்பு தற்போது பாஜகவில் இருக்கிறார். சுந்தர்.சி எந்த கட்சியிலும் இல்லை ஆனால் ஏ.சி.சண்முகத்துடன் இணைந்து படங்களை தயாரித்து வந்த நிலையில் அவருக்காக சுந்தர்.சியும், குஷ்புவும் பிரச்சாரம் செய்திருந்தனர். மதுரையில் கடந்த பிப்.22ம் தேதி குடியரசு துணைத் தலைவர் சி.பி ராதா கிருஷ்ணன் தலைமையில் நடந்த வ.உ.சி. சிலை அடிக்கல் நாட்டு விழாவில் சுந்தர்.சி கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Source link