மதுரை: மானாமதுரையில் போலீஸ் காவலில் உயிரிழந்த இளைஞரின் உடலை மதுரை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்ய

மதுரை: மானாமதுரையில் போலீஸ் காவலில் உயிரிழந்த இளைஞரின் உடலை மதுரை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ள ஐகோர்ட் மதுரைக்கிளை, சாலை மறியலில் ஈடுபட்டுள்ளவர்கள் கலைந்து செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளது.

மார்ச் 6ல் மானாமதுரை சீயோன் நகரில் ஜீவா நகர் ஜெயக்குமார், ஆதனுார் அழகரை கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்த ஆகாஷ் டெலிசன் 26, குணா அரிவாளால் வெட்டினர். இந்த வழக்கில் ஆகாஷ் டெலிசனை போலீசார் கைது செய்ய முயன்றனர். அப்போது தப்பி ஓட முயற்சித்து கீழே விழுந்ததில் அவரது கால் முறிந்தது. மதுரை அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று அதிகாலை 12:30 மணிக்கு உயிரிழந்தார். போலீசார் அடித்ததால் தான் ஆகாஷ் டெலிசன் இறந்ததாக குற்றம் சாட்டிய உறவினர்கள், மதுரை – ராமேஸ்வரம் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், ஆகாஷின் தந்தை ரமேஷ் கண்ணன் ஐகோர்ட் மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், ஆகாஷ் இறப்பு குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும். குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். விதிமுறைகளை பின்பற்றி பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும். இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனக்கூறியிருந்தார்.

இதனை விசாரித்த நீதிபதி நீதிபதி விஜயகுமார் மதுரை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். மானாமதுரை நான்கு வழிச்சாலையில் மறியலில் ஈடுபட்டு உள்ளவர்களை கலைந்து செல்லுமாறு மனுதாரர் தரப்பில் அறிவுறுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

Source link