சென்னை: மேலூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் எம்பி விஸ்வநாதன் போட்டியிடுவார் என அக்கட்சி அறிவித்துள்ளது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டசபை தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 27 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அக்கட்சி அறிவித்தது. மதுரை மாவட்டம் மேலூர் தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில், மேலூர் தொகுதிக்கு வேட்பாளரை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. அங்கு விஸ்வநாதன் போட்டியிடுவார் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்து உள்ளார். இவர் காஞ்சிபுரம் தொகுதி முன்னாள் எம்பி ஆவார்.
