மத்தியப் பிரதேசம்: பசுவைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் பரவிய தகவல்; கடைகள், வீடுகளுக்குத் தீ வைப்பு

மத்தியப் பிரதேசத்தில் பசு மாடு ஒன்றை அதன் உரிமையாளர் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் பரவிய வீடியோவால் வன்முறை ஏற்பட்டுள்ளது.

கலவரத்தில் சேதம் அடைந்த வாகனம்

மத்தியப் பிரதேச மாநிலம் பெதுல் மாவட்டத்தில் பசு மாடு ஒன்றை பாலியல் வன்கொடுமை செய்ததாக வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியானது. இதைத் தொடர்ந்து அங்குள்ள தம்ஜிபுரா என்ற இடத்தில் வன்முறை ஏற்பட்டது.

இதையடுத்து இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதோடு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபரின் கடைக்குத் தீவைத்தனர். இந்த வன்முறை அருகில் உள்ள இடங்களுக்கும் பரவியது. இதில் 7 கடைகள், 4 கார்கள், 4 பைக்கள் மற்றும் ஒரு வீட்டிற்குப் போராட்டக்காரர்கள் தீவைத்தனர்.

தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனால் இந்தத் தீ விபத்து மற்றும் வன்முறையில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. நிலைமையைக் கட்டுப்படுத்த கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பசு
பசு

தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாக மாவட்ட போலீஸ் அதிகாரி வீரேந்திர ஜெயின் தெரிவித்தார். வதந்தி காரணமாக வன்முறை பரவியதாக அவர் குறிப்பிட்டார். மேலும் வன்முறை மற்றும் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் இத்தாக்குதலில் ஈடுபட்டதாகப் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. வட மாநிலங்களில் பசுவதை மற்றும் பசு கடத்தலில் ஈடுபட்டவர்கள் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் நடந்திருக்கின்றன.

Source link