துனிஷ்: சர்வதேச ‘கன்டெண்டர்’ டேபிள் டென்னிஸ் இரட்டையரில் இந்தியாவின் மனுஷ் ஷா, தியா ஜோடி 2வது இடம் பிடித்தது.
துனிஷியாவில், டபிள்யு.டி.டி., ‘கன்டெண்டர்’ டேபிள் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் கலப்பு இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் மனுஷ் ஷா, தியா சிட்டாலே ஜோடி, ஸ்பெயினின் அல்வாரோ ராப்லெஸ், மரியா ஜியாவோ ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை 9-11 என இழந்த இந்திய ஜோடி, பின் எழுச்சி கண்டு 2வது செட்டை 13-11 என வென்றது. பின் எழுச்சி கண்ட ஸ்பெயின் ஜோடி, அடுத்த இரு செட்களை 12-10, 11-5 என தன்வசப்படுத்தியது.
மொத்தம் 30 நிமிடம் நீடித்த போட்டியில் மனுஷ் ஷா, தியா ஜோடி 1-3 (9-11, 13-11, 10-12, 5-11) என்ற கணக்கில் தோல்வியடைந்து 2வது இடத்தை கைப்பற்றியது.
