மயாமி ஓபன்: அனிசிமோவா முன்னேற்றம்

மயாமி: அமெரிக்காவில், மயாமி ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் 3வது சுற்றில் அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவா 6-4, 6-2 என உக்ரைனின் யூலியாவை வீழ்த்தினார். அமெரிக்காவின் கோகோ காப் 3-6, 6-0, 6-1 என சகவீராங்கனை அலிசியா பார்க்சை தோற்கடித்தார். அமெரிக்காவின் மடிசன் கீஸ் 6-0, 6-3 என ருமேனியாவின் எலினா-கேப்ரிலா ரஸை வென்றார்.

வாலன்சியா கலக்கல்

மாட்ரிட்: ஸ்பெயினில், ‘லா லிகா’ கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. லீக் போட்டியில் வாலன்சியா, செவில்லா அணிகள் மோதின. வாலன்சியா 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் வில்லாரியல் அணி 3-1 என, ரியல் சோசிடாட் அணியை வென்றது. எல்சே அணி 2-1 என, மல்லோர்கா அணியை வீழ்த்தி, இந்த ஆண்டு முதல் வெற்றியை பதிவு செய்தது.

எக்ஸ்டிராஸ்

* மும்பையில் நடந்த ஐ.டி.எப்., டென்னிஸ் ஒற்றையர் பைனலில் இந்தியாவின் சித்தார்த் ரவாத் 1-6, 2-6 என, ஆஸ்திரேலியாவின் பிலிப் செகுலிக்கிடம் தோல்வியடைந்து 2வது இடம் பிடித்தார்.

* மெக்சிகோவில் நடந்த ஏ.டி.பி., சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் இரட்டையர் பைனலில் இந்தியாவின் அர்ஜுன் காதே, ரித்விக் ஜோடி 3-6, 6-7 என, ஈகுவடாரின் ஆன்ட்ரேட், அர்ஜென்டினாவின் அகஸ்டின் கோமஸ் ஜோடியிடம் தோல்வியடைந்தது.

* ஸ்பெயினில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச பாரா பாட்மின்டன் தொடரின் ஒற்றையர் பைனலில் (எஸ்.எல். 3) இந்தியாவின் பிரமோத் பகத் 21-17, 10-21, 21-18 என, சகவீரர் நிதேஷ் குமாரை வீழ்த்தி தங்கம் வென்றார். தவிர இத்தொடரில் பிரமோத் பகத் 2 தங்கம், ஒரு வெள்ளி என 3 பதக்கம் கைப்பற்றினார்.

Source link