விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’. இப்படத்தில் க்ரித்தி ஷெட்டி கதாநாயகியாகவும் எஸ்.ஜே. சூர்யா, மிஷ்கின், யோகிபாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். மேலும் நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரதீப் ரங்கநாதனுக்கு அப்பா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
லலித் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஹைதராபாத்தை தொடர்ந்து சென்னையில் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய பிரதீப் ரங்கநாதன், க்ரித்தி ஷெட்டி பற்று கூறும்போது, “ஒரு மாநிலத்தில் இருப்பவர் மற்ற மாநில மொழியை பேசுவது கஷ்டம். ஆனால் க்ரித்தி ஷெட்டி இரண்டு வருடங்களில் சரலமாக தமிழ் பேசுகிறார். இந்த படத்திற்கு அவரே டப் செய்திருக்கிறார். அது பெரிய விஷயம்” என்றார்.
பின்பு அவரது ரசிகர்கள் குறித்து பேசும்போது, “எப்போதுமே என்னோட ஃபேன்ஸ் என்று சொல்வதற்குக் கொஞ்சம் கூச்சப்படுவேன். ஏன்னா ‘என்னடா அதுக்குள்ள உனக்கு ஃபேன்ஸா’ என சொல்வாங்க. ஆனா நான் போகிற இடமெல்லாம் அவர்கள் காட்டுகின்ற அன்பையும், சமூவ வலைதளங்களில் எனக்காக காட்டும் ஆதரவையும் பார்க்கும் போது அவங்க பேரைச் சொல்ல நான் ஏன் கூச்சப்படணும்னு தோணுச்சு. அதனால் இப்ப சொல்றேன், என்னோட ஃபேன்ஸ், உங்க எல்லோருக்கும் ரொம்ப நன்றி, நீங்க இல்லாம நான் இல்ல. லவ் யூ சோ மச்” என்றார்.
