அழகே அழகே சீரியலில் மலர் கதாபாத்திரத்தில் தற்போது நடித்து வருகிறார் அன்ஷித்தா. “செல்லம்மா’ சீரியல், பிக் பாஸ், பர்சனல் எனப் பல விஷயங்கள் பற்றி அன்ஷித்தாவிடம் உரையாடினோம்.
மலையாளம் கலந்த தமிழில் பேசிய அவர், “ஜியோ ஹாட்ஸ்டார்-ல் டாப் 5 சீரியல்களின் பட்டியலில் எங்களுடைய ‘அழகே அழகே’ சீரியல் வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இது எங்கள் அனைவரின் கூட்டு முயற்சியால்தான் சாத்தியமானது.
நக்ஷத்திரா இந்தச் சீரியலில் இருக்கிறாங்க என்பது முதலில் எனக்கு தெரியாது. பூஜைக்கு வேற ஒருத்தர் வந்திருந்தாங்க. ஷுட் தொடங்குனதுக்கு அப்புறம்தான் நக்ஷத்திரா இந்தச் சீரியல்ல நடிக்கிறாங்கனு எனக்கு தெரியும். எனக்கு ரொம்ப ஹாப்பி ஆயிடுச்சு.
நக்ஷத்திரா கூட நான் டக்குனு ஃப்ரண்ட் ஆயிட்டேன். இரண்டு மருமகள்களின் கதைன்னு சொல்லும்போது நிறைய சண்டை இருக்கும்னு நினைச்சேன்.
ஆனா அப்படி இல்லாம ரெண்டு பேரோட கதாபாத்திரமும் நல்லா இருக்கு” என்றவர் மேக்கப் மற்றும் காஸ்ட்யூம் பற்றி பேசும்போது, “அழகே அழகே சீரியல் நான் பண்ற ரோல்க்கு மேக்கப் பெருசா தேவைப்படல.
என்னுடைய இயல்புல நடிக்கிற மாதிரியே இருக்கு. நான் இதுக்கு முன்னாடி பண்ணின சீரியலிலும் எனக்கு மேக்கப் போடுற வேலை இல்லை. அதனால, ‘அழகே அழகே’ சீரியல் வரும்போது மேக்கப் போடலாம்னு எதிர்பார்த்து வந்தேன்.
