மலைக்கோட்டையில் மல்லுக்கட்டும் கழகங்கள்… விஜய் குறிவைக்கும் தொகுதியில்.! – திருச்சி மாவட்ட நிலவரம் | முந்துவது யார்? | From Vijay to anbil, trichy constituencies current status, who is in lead

2. லால்குடி சட்டமன்ற தொகுதி :

லால்குடி தொகுதியில் நெல், வாழை, கரும்பு, சோளம், பருத்தி  என்று மக்களின் வாழ்வாதாரத்துக்கு பல பயிர்கள் பயிர்  செய்யப்படுகின்றன. கொள்ளிடம் ஆறு இந்த தொகுதியில் பாய்கிறது. லால்குடி தொகுதியில் உடையார், முத்தரையர், பட்டியல் சமூகத்தினர், முக்குலத்தோர், இஸ்லாமியர்கள் என்று வாக்குகளை நிர்ணயிக்கும் இடத்தில அடுத்தடுத்து  பல்வேறு சமூக மக்கள் வசிக்கின்றனர். 

இந்த தொகுதியில் தொடர்ந்து நான்காவது முறையாக எம்.எல்.ஏ-வாக இருக்கும் சௌந்தர பாண்டியன் தி.மு.க-வில் மறுபடியும் சீட் கேட்கிறார். ஆனால், இவருக்கு சீட் கிடைக்கவிடாமல் தடுக்கும் வேலைகளில் அமைச்சர் கே.என்.நேரு தரப்பு ஈடுப்பட்டு வருவதாக தி.மு.க-வில் திகுதிகு கிளம்பியிருக்கிறது.

sountharapandiyan

sountharapandiyan
d.dixith

இவரைத்தவிர, மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மத்திய மாவட்ட கலை இலக்கிய அமைப்பாளர் துரை.கந்தசாமி, பொதுக்குழு உறுப்பினரும்,  முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான கருணாநிதி ஆகியோர் சீட் பெற கடுமையாக முயற்சிக்கிறார்கள். கூட்டணிக் கட்சிகள் சார்பில் மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சி இந்த தொகுதியை கேட்டு வருகிறது.

அதேபோல், சமீபத்தில் அ.தி.மு.க-வில் இணைந்த லாட்டரி அதிபர் மார்ட்டின் மனைவி லீமா ரோஸ் இந்த தொகுதியில் போட்டியிட போவதாக சொல்கிறார்கள். இவரைத்தவிர, தெற்கு மாவட்ட வர்த்தக அணி துணை செயலாளர் ராஜேஷ் தங்கராஜன், புள்ளம்பாடி தெற்கு ஒன்றிய  செயலாளர்  தின்னக்குளம் டி.என்.சிவகுமார், லால்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் ‘சூப்பர்’ டி.என்.டி நடேசன், லால்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் அசோகன் ஆகியோர் சீட் கேட்கிறார்கள்.

அ.தி.மு.க கூட்டணியில் த.மா.கா-வும் சீட் பெயர் முயற்சிப்பதால், கடந்தமுறை போட்டியிட்ட டி.ஆர்.தர்மராஜ் சீட் கேட்டு ஃபைட் செய்து வருகிறார்.

நாம் தமிழர் கட்சி சார்பில் வழக்கறிஞர் மதன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

த.வெ.க சார்பில் லால்குடி தொகுதி மாவட்டச் செயலாளர் விக்னேஷ் சீட் கேட்டு முயற்சித்து வருகிறார்.

அறிமுகம் இல்லாத நாம் தமிழர், த.வெ.க வேட்பாளர்கள் களம் காண இருப்பதால், பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.

இப்போதைக்கு இந்த தொகுதியில் உதயசூரியன் சற்று பிரகாசிக்கிறது.

Source link